Sunday, January 26, 2014

A First Meet on 26th January 2014 at Corniche Club

நமது இந்திய தேசத்திற்கு இன்றைய நாளான ஜனவரி 26 ம் தேதி எப்படி மறக்கமுடியாத நாளோ அப்படி நமது நண்பர்கள் கூட்டம் 28 வருடம் கழித்து ஒன்று கூடியது  நம் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியளிக்கக் கூடியதாகவும் என்றுமே மறக்கமுடியாத நாளாகவும் இன்று அமைந்தது.

நம்மில் பல பேர் இன்று மேல்நிலையில் இருந்தாலும் எல்லாவற்றையும் மறந்து ஒன்றுகூடி மகிழ்ந்தது, பழைய 10th std class ல் இருப்பது போன்று ஞாபகத்திற்கு வருகிறது.  இது போல ஆறு மாதத்திற்கு ஒரு முறை நாம் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்வது ஒரு புத்துணர்ச்சியை அழிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

நாம் அனைவரும் நமக்காகவோ பிறருக்காகவோ, தேவையோ தேவையில்லாமலோ ஏதாவது ஒரு வகையில் செலவு செய்துகொண்டுதான் இருக்கிறோம். நான் கடந்த 1988ல் இருந்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை யாருக்கேனும் இரத்த தானம் செய்யும் பழக்கத்தை கடைபிடித்து வருகிறேன். அதுபோல ஒவ்வொருவரும் அவரவர் வழியில் ஏதாவது ஒரு உதவியை மற்றவர்களுக்கு செய்துகொண்டு இருப்பீர்கள். அதை ஏன் நாம் ஒரு கூட்டாக அடிப்படை வசதி கூட இல்லாத ஒரு மாணவ மாணவிக்கோ, கார்த்திக் பாபு சொன்னது போல நம்மால் இயன்ற அளவு அவர்களது கல்லூரி படிப்பு முடியும் வரை உதவி செய்து, நம்மால் ஒருவர் பெரிய அந்தஸ்தை அடைய வைக்கும்போது அந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.

‘A Single Tree does’nt make a Forest’ என்பது போல நமது Team என்றும் இதே மாதிரி மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையவேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

(நம்மில் சிலர் இன்று வரமுடியாவிட்டாலும் அடுத்தகூட்டத்திற்கு தவறாமல் வருவார்கள் என அனவரும் எதிர்பார்க்கிறோம்.)

                                                                                                -   Bharani

No comments:

Post a Comment